அண்ணே, Cashlessங்கராங்க, Card யூஸ் பண்ணுங்கன்ராங்க, Swipe மெஷின் அப்படீங்கராங்க
எனக்கு ஒன்னும் புரியலிண்ணே!
அடேய், இப்போ கல்யாணத்துக்கு மாப்பிளையோ, பொண்ணோ பாக்கணுன்னா என்ன பண்ணுவே?
ஒரு ப்ரோக்கர் கிட்டே சொல்லி நல்ல இடமா பாக்க சொல்வேன்....
அப்படி பாத்துகுடுத்தவுடனே அவர் என்ன கேப்பார்?
கமிஷன் கேப்பார்..
சரி , ஒரு பிளாட், அல்லது வீடு வங்கணுன்னா என்ன பண்ணுவே?
ஒரு நில ப்ரோக்கர் கிட்ட சொல்வேன். அவர் நல்ல இடமா பாத்து குடுப்பார்.
நான் கமிஷன் குடுப்பேன்.
அதான நீங்க சொல்ல வரீங்க...
பரவால்லயே புத்திசாலியா இருக்கியே..
அதே மாதிரி தான் இந்த கார்டு, cashless எல்லாம்.
இனிமே அரிசி ,பருப்பு, புளி, உப்பு எல்லாம் வங்கணும்னா குறைஞ்சது 2% கமிஷன் கொடுக்கணும்.
போங்கண்ணே, இதுக்கெல்லாமா கமிசன் கொடுப்பாங்க?
அமாண்டா, இப்போ நீ உன் பாக்கெட்ல இருந்து பணத்தை எடுத்து கடைக்காரர்கிட்ட குடுக்கிற. அவர் வாங்கி கல்லாவுல போட்டுக்குறார்.
ஆனா கார்டு உறைச்சின்னா
உன் பேங்க் அக்கௌன்ட்ல இருந்து கடைக்காரர் அக்கோவுண்ட்ல போடணும் இல்ல அந்த வேலைய செய்யறதுக்கு தான் இந்த கமிஷன்.
இந்த கமிஷன் யாருக்கு போகும்ண்ணே?
அது பேங்க்கும் போலாம், PAY TM மாதிரி கம்பெனிக்கும் போலாம்.
எப்படியானாலும் அத வியாபாரி்தான் கட்டணும்.
அத அவர் பொருள் விலையில் ஏத்திடுவாரு, அல்லது நம்மகிட்ட அதிகமா பில் போடுவாரு.
அப்போ நான் ஒரு மாசத்துக்கு 20000 ரூபா செலவு பண்ணா 400 ரூபா கமிஷனுக்கே போய்டுமா?
கரெக்ட், அதே தான்.
இது மாதிரி இந்தியாவுல 100 கோடி பேர்கிட்ட இருந்து மாசம் சராசரியா 400 ரூபா கமிஷன் அடிச்சா மொத்தம் எவ்வளவு?
400×100=40000 கோடிண்ணே! அப்ப வருஷத்துக்கு?
அண்ணே தல சுத்துதண்ணே!
கணக்கில் கில்லடியா இருக்கியே?
அண்ணே இந்த கணக்கு அந்நியன் படத்துல வர்ற கணக்கு மாதிரியே இருக்கண்ணே!
இதில இருந்து தப்பிக்க வழியே இல்லையா?
சத்தமா சொல்லாதடா,
அப்புறம் உனக்கு தேசபற்றே இல்ல , பாகிஸ்தானுக்கு போங்கன்னு சொல்லிடுவாங்க!
Cashleஷ் அப்பிடின்னா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment